திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பால கிருஷ்ணனிடம் போலி பத்திரம் தயாரித்து விவசாயிகள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த தனியார் கல்வி நிறுவனம் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்த சமூக ஆர்வலர் கலைச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்.
திருச்சி மாவட்டம் துறையூரில் தனியார் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர்கள் சிலர் துறையூர் சார்பதிவாளர் அவருடைய கையெழுத்து மற்றும் அலுவலக முத்திரைகளை பயன்படுத்தி போலியான ஆவணங்கள் தயாரித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வங்கியில் கடன் பெற்றுள்ளனர்.
மேலும் போலியாக சார்பதிவாளருடைய கையெழுத்தையும் அவருடைய அலுவலக முத்திரையை பயன்படுத்தியதற்காக துறையூர் சார்பதிவாளர் மற்றும் டிஆர்ஓ விசாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துறை ரீதியாக சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து தாத்தையங்கார் பேட்டை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் அந்த புகார் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் காவல் நிலையம் ஆய்வாளரிடம் நடவடிக்கை எடுக்க நான் சமூக ஆர்வலர் என்ற முறையில் விவசாயிகளை ஏமாற்றி போலியான பத்திரம் தயாரித்து நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க நான் முயற்சி செய்து வந்தேன். ஆனால் தாத்தையங்கார் பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி இதெல்லாம் உனக்கு தேவையில்லாத வேலை உன் வேலையை மட்டும் பார்த்துக் கொள், இல்லை என்றால் உன் மீது பொய் வழக்குப் போட்டு விடுவதாக மிரட்டுகிறார். மேலும் இதுகுறித்து நான் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு மற்றும் திருச்சி மண்டல காவல்துறை ஐஜி பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளேன். இந்த விஷயத்தில் ஐஜி அவர்கள் உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.
மேலும் நான் சமூக ஆர்வலர் என்ற முறையில் சார்பதிவாளர் அலுவலகம் முத்திரை பயன் படுத்தியது தவறு என்று நிரூபித்தும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க போராடி வருகிறேன் ஆனால் காவல் ஆய்வாளர் என் மீது பொய் வழக்குப் போடுவதாக தொடர்ச்சியாக மிரட்டி வருகிறார் என தெரிவித்தார்..