தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து சிறப்புரை யாற்றினார். இதில் மமக மாநில பொருளாளர் சபியுல்லாகான், மாவட்ட தலைவர் முகமது ராஜா, மாவட்ட செயலாளர் பைஸ் அகமது, தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடுகின்றது. திருச்சி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சியில் மொத்தம் 6 வார்டுகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது. நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றியை விட இந்த தேர்தலில் அதிக இடங்களில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். அதற்காக மனிதநேய மக்கள் கட்சி பாடுபடும் என்று தெரிவித்தார்.