கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை கல்லூரி நிர்வாகமும், கர்நாடகா பாஜக அரசும் தடைவிதித்தது. இது இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 வழங்கியுள்ள தனிநபர் மத உரிமைகளை பறிக்கும் விதமாக இருப்பதால் இதனை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சி பீமநகர் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அலுவலகத்திலிருந்து பீமநகர் ஜிஎஸ்டி திருச்சி யூனிட் அலுவலகம் வரை கண்டன முழக்கங்களுடன் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஷேக் மைதீன், மாநில செயலாளர் அப்பாஸ் அலி ஆகியோர் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ரபீக் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.