திருச்சி காவேரி மருத்துவமனையில் முதன்முறையாக இரத்த சார்ந்த நோய் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கான பிரத்தியோக சிகிச்சை பிரிவு இன்று துவக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் செங்குட்டுவன்
ஹெமட்டாலஜி என்பது பல்வேறு இரத்தம் மற்றும் ரத்தப்போக்கு சம்மந்தமான பிரச்சினையைக் கையாளும் ஒரு துறையாகும். ரத்த சம்பந்தமான பிரச்சினைகள் ஒரு எளிய ஊட்டச்சத்து குறைபாடு நிலையிலிருந்து வீரியமான இரத்தப்புற்று நோய் அளவு கூட இது மாறலாம். ஆரம்ப காலகட்டத்தில் நோயின் தன்மையை அறிந்து சரியான சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயாளி நோயிலிருந்து காப்பாற்ற முடியும் என தெரிவித்தார்.
மேலும், சோர்வு, மயக்கம் அல்லது சோம்பல் போன்று சிவப்பணுக்களின் பிரச்சினையாகும் மரபுவழியை பொருத்து அதன் அறிகுறிகள் மாறுபடலாம். ரத்த உறைதலின் விளைவாகவோ அல்லது வெள்ளை அணுக்களில் குறைபாடுகள் கிருமித் தொற்று நோய்களுக்கு வழி வகுக்கின்றன. இதனை தீர்வு செய்யும் வகையில் தகுதிவாய்ந்த ஹெமட்டாலஜிஸ்ட் மருத்துவர் மற்றும் சிறப்பு உட்கட்டமைப்பு கொண்ட ஆய்வகத்தின் மூலமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்
மேலும், எலும்பு மச்ஜை மாற்று சிகிச்சை என்பது ஒருவரின் நோயுற்ற நீக்கப்பட்டு பொருத்தமான அல்லது பாதி பொருந்திய நன் கொடையாளர்கள் குருத்து அணுக்களை செலுத்தி குருதியை உருவாக்கும் முறையாகும். ரத்தத்தை உட்செலுத்துதல் மூலம் மாற்றப்படும் ஒரு செயல் முறையாகும் என தெரிவித்தார். பேட்டியின்போது மருத்துவமனை இயக்குனர் அன்புச்செழியன், மருத்துவர் செந்தில்முருகன், குருதியியல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மருத்துவர் சுப்பையா ஆகியோர் உடன் இருந்தனர்.