தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், கவிதை, பாடல் எழுதுதல், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் 16 மற்றும்17-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. மதநல்லிணக்கம் அல்லது விடுதலை போராட்டம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி வரும் 16-ந் தேதி எல்ஐசி காலனியில் உள்ள மயன்நுண்கலைப் பள்ளியில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்பில் கவிதை, விடுதலை போரில் வீழ்ந்த மலர்கள் என்ற தலைப்பில் பாடல் எழுதுதல், தனித்துவம் நமது உரிமை, பன்மைத்துவம் நமது வலிமை என்ற தலைப்பில் கட்டுரை போட்டிகளும் மற்றும் பேச்சுப் போட்டியும் வரும் 17-ந் தேதி உறையூர் வாத்துக்கார தெருவில் உள்ள ஆர்.சி. பள்ளி அருகில் உள்ள டி.என். எம்.எஸ்.ஆர்.ஏ அரங்கத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் மூன்று பரிசுகள் தவிர ஆறுதல் பரிசாக புத்தகங்கள் வழங்கப்படும். போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் பெயரை 90951 46767 என்ற செல்போன் எண்ணில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இத்தகவலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநகர செயலாளர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *