Author: JB

திருச்சியில் 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் . டி.ஐ.ஜி வருண்குமார் உத்தரவு:-

திருச்சி காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட திருச்சி கரூர் அரியலூர் பெரம்பலூர் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி வரும் 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சிறுகனூருக்கும், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, துவாக்குடி காவல் நிலையத்துக்கும்,…

பட்டை, நாமம் போட்டு மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களால் திருச்சியில் பரபரப்பு:-

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வு தின சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஓய்வூதியர்கள் பட்டை நாமம் போட்டு தலைவிரி கோலத்தில் மடியந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் மாவட்ட தலைவர் சவரிமுத்து தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த…

ஶ்ரீமத் ஆண்டவர் ஆசிரமத்தின் 12வது பீடாதிபதி ஶ்ரீ வராஹ மஹா தேசிகன் சுவாமிகள் முக்திநாத் இல் மங்களா சாசனம்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 12வது பீடாதிபதி ஶ்ரீ வராஹ மஹா தேசிகன் சுவாமிகள் குமரி முதல் இமயம் வரை சாலகிராம யாத்திரையாக பல்வேறு கோவில்களுக்கு சென்று மங்களாசாசனம் செய்து வருகிறார். இந்நிலையில் ஶ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தில் உள்ள எந்த சுவாமிகளும்…

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 71-வது பிறந்த நாள் விழா திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா ஃபாரிக் ஏற்பாட்டில் ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மரக்கடை பகுதியில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில் மாவட்ட செயலாளர் நசீமா…

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 71-வது பிறந்த நாள் விழா அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் ஜோதிவாணன் ஏற்பாட்டில் பார்வையற்றோருக்கு மதிய உணவு வழங்கினர்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் உள்ள லூப்ரா பார்வையற்றோர் இல்லத்தில் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர்…

சென்னையில் வருகிற மே 15 ஆம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்:-

காவிரி ஆற்றில் வரும் வெள்ளநீர் கடலில் சென்று வீணாக கலக்கிறது. இந்த வெள்ளை நீரை சேமிக்க காவேரி அயயாறை இணைக்க வேண்டும் அதேபோல் விவசாயிகள் உரிமைகளுக்காக போராடும் பொழுது அவர்கள் மீது போடப்பட்ட 144 வழக்குகளை தள்ளுபடி வேண்டும் தனிநபர் இன்சூரன்ஸ்…

ஜார்ஜியா நாட்டில் நடந்த 15வது சர்வதேச கப் ஆஃப் காஸ்டஸ் 2025 நடன போட்டி – தங்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு:-

திருச்சி காட்டூர் பகுதியை சேர்ந்த சாம்ஸ் டான்ஸ் அகாடமி சார்பில் கடந்த மே 1-ம் தேதி முதல் 5ஆம் தேதி வரை ஜார்ஜியா நாட்டில் உள்ள திபிலிசி என்ற மாகாணத்தில் நடைபெற்ற 15வது சர்வதேச கப் ஆஃப் காஸ்டஸ் 2025 திருவிழாவில்…

திருச்சி உக்கிர மாகாளி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு:-

முற்கால கரிகால் சோழனின் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு, வெற்றியின் தெய்வமாக கொண்டாடப்படும், திருச்சி தென்னூர் அருள்மிகு உக்கிர மாகாளியம்மன் சித்திரை தேர் திருவிழா கடந்த 4-ந்தேதி மகா அபிஷேகம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ச்சியாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருவீதி…

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு பகுதி செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில் மானிக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெப்பக்குளம் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் அதிமுக மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில் மாணிக்க…

திருச்சியில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கில் ஆய்வு செய்த – எம்பி துரை வைகோ:-

திருச்சி காஜாமலை பகுதியில் மத்திய சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது இந்த சேமிப்பு கிடங்கு சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது இந்த கிடங்கில் 19 லட்சத்து 50 ஆயிரம் ரேசன் அரிசி மூட்டைகள் உள்ளிட்டவை சேமித்து வைக்கப்பட்டுள்ளது இந்த கிடங்கில்…

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு அம்மா பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை செய்து, தங்கத்தேர் இழுத்தனர்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்டம் அம்மா பேரவை சார்பில் திருச்சி உறையூர் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் கோவிலில் அம்மா பேரவை…

இருண்ட கால அதிமுக ஆட்சியிலிருந்து தமிழகத்தை மீட்டு தி.மு.க ஆட்சி விடியலை தந்துள்ளது – திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு:-

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் காய்கறி சந்தைக்கு அடிக்கல் நாட்டி, ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகனங்கள் முனையம் ஆகியவற்றை திறந்து வைத்தார். தொடர்ந்து பஞ்சப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு 55,000 பேருக்கு…

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் 12.5 கிலோ கஞ்சா பறிமுதல்:-

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இன்று மதியம் சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக குருவாயூர் செல்லும் அதிவிரைவு வண்டியில் (16127) ரயில்வே இருப்புப் பாதை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா ,ரேஷன்…

திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வெண்கல சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்:-

தமிழ் திரையுலகின் மாபெரும் நடிகரான நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருச்சியில் சிலை அமைக்க 2009ஆம் ஆண்டு, திமுக ஆட்சி காலத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சி மாநகராட்சி எல்லைக்குள் உள்ள பாலக்கரை ரவுண்டானா பகுதியில், 2011ஆம் ஆண்டு 9 அடி…

திருச்சி துவாக்குடியில் 56.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்:-.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக துவாக்குடி அரசு பாலிடெக்னிக்…

தற்போதைய செய்திகள்