Author: JB

சாலை ஓரத்தில் நின்ற ஈச்சர் லாரியில் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு

திருச்சி எடமலைப்பட்டி புதூர் மெயின் ரோட்டில் இன்று மதியம் ஈச்சர் லாரியை டிரைவர் ஒருவர் சாலை ஓரமாக குப்பைத்தொட்டி அருகே நிறுத்தி வைத்துவிட்டு டீ குடிக்க சென்றார். இந்நிலையில் குப்பைத் தொட்டியிலிருந்து திடீரென பரவி தீ அருகிலிருந்த ஈச்சர் லாரியின் முன்பகுதியில்…

திருச்சியில் மர்ம உறுப்பை அறுத்து ஆண் தற்கொலை.

திருச்சி தென்னூர் ஜென்ரல் பஜார் பகுதியை சேர்ந்தவர் கலில் வயது 52 இவர் காந்தி மார்க்கெட் அருகே லட்சுமி விலாஸ் எலுமிச்சை மண்டியில் லோடுமேன் ஆக வேலை பார்த்து வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக இவரது மனைவி இவரை விட்டு…

திருச்சியில் (21-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 884 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1641 பேர்…

திருச்சி போலீசுக்கு கண்கலங்கி நன்றி தெரிவித்த கல்லூரி மாணவி.

கொரோனாவால் கல்லூரிகள் இயங்காததால் கூலித் தொழிலாளியான தனது தந்தையிடம் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருப்பதால் தனக்கு ஒரு போன் வாங்கி தரும்படி கேட்டுக்கொண்டிருந்தார். அவரது தந்தையோ தன் மகளுக்கு மாதத் தவணையில் புதிதாக ஆண்ட்ராய்ட் போன் வாங்கி கொடுத்து ஆன்லைன் வகுப்புகளில்…

SDPI கட்சியின் 13வது ஆண்டு தொடக்க விழா திருச்சியில் இன்று நடந்தது.

ஜுன் 21 SDPI கட்சி தொடங்கி 13வது ஆண்டையோட்டி இந்தியா முழுவதும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதனடிப்படையில் திருச்சி மாவட்டம் சார்பாக ஜீன் 21 காலை 07-30 மணியளவில் திருச்சி மாவட்ட தலைமை…

சர்வதேச 7-வது யோகாசன நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடந்தது.

இந்திய பிரதமர் மோடி அவர்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு அளிக்கும் யோகக் கலையை உலகம் முழுவதும் பிரபலப் படுத்தி, அதன் மூலம் உலக நாடுகள் ஒருமித்த ஆதரவுடன் 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன்…

கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் சூடம் ஏற்றி ஆர்ப்பாட்டம்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் பக்தர்களுக்கு தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மதுப்பிரியர்களின் வசதிக்காக டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளது. அதனைக் கண்டித்தும் உடனடியாக தமிழக அரசு பக்தர்களின் வழிபாட்டிற்காக அனைத்து கோவில்களையும்…

தேமுதிக மாவட்ட செயலாளரின் மரப் பட்டறையில் திடீர் தீ விபத்து.

திருச்சி தஞ்சை – சாலையில் அரியமங்கலம் பகுதியில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கு உள்ளது. இந்த பங்க் அருகே திருப்பதி மரப்பட்டரை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று இரவு சுமார் 10 மணி அளவில் திடீரென மரப்பட்டையிலிருந்து லேசான புகைமூட்டம் வெளியேறியது. சிறிதுநேரத்தில்…

மாயமானவர் பிணமாக மீட்பு-திருச்சி போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அடுத்துள்ள மலைப்பட்டி கல்குவாரி ஒன்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்றுமிதப்பதாக அப்பகுதி பொது மக்கள் சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி…

தமிழகத்தில் வருகிற 28-ம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு முதல்வர் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் நாளை முதல் மாவட்டங்களுக்குள்பொதுப் போக்குவரத்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணியுடன் முடிவடிகிறது.இந்நிலையில், மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 28ம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின்…

திருச்சியில் மாயமான பள்ளி மாணவியை மீட்ட போலீசார்.

திருச்சி பாலக்கரை மோட்டார் வேர்ஹவுஸ் குடிசைப்பகுதி அம்பேத்கர் நகரை சேர்ந்த டேவிட் என்பவரின் மகள் ஜெனிட்டா வயது 10 இவர் (அம்மா இல்லாதவர்) மேலப்புதூர் பிலோமினாஸ் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். டேவிட் திருநெல்வேலியில் வேலை பார்த்து வருகிறார்.‌ தற்போது…

கொரோனா 3-ம் அலையை “இருகரம் கூப்பி” வரவேற்கும் திருச்சி மக்கள்.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் 2-ம் அலையை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கோரோனா‌ நோய்த்தொற்று பல மாவட்டங்களில் குறைந்து வருவதைத் தொடர்ந்து. 11 மாவட்டத்தைத் தவிர பிற மாவட்டங்களில்…

தமிழகத்திலேயே முதன்முதலாக திருச்சி சிறையில் 1655 பேருக்கு, 100% கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.

திருச்சி சரக சிறைகள் மற்றும் சீர்திருத்த துறை துணைத் தலைவர் கனகராஜ் அவரின் வழிகாட்டுதலின்படி, திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் முன்னிலையில் திருச்சி மத்திய சிறையில் உள்ள அனைவருக்கும் கொரானா தடுப்பூசி 100% செலுத்தப்பட்டுள்ளது. திருச்சி மத்திய சிறை துறை…

திருச்சியில் (19-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 510 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 2952 பேர்…

திருச்சியில் பள்ளி மாணவி மாயம்.

திருச்சி பாலக்கரை மோட்டார் வேர்ஹவுஸ் குடிசைப்பகுதி அம்பேத்கர் நகரை சேர்ந்த டேவிட் என்பவரின் மகள் ஜெனிட்டா வயது 10 இவர் (அம்மா இல்லாதவர்) மேலப்புதூர் பிலோமினாஸ் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது அத்தையின் பராமரிப்பில் அவரது வீட்டில் தங்கி…

தற்போதைய செய்திகள்