Category: திருச்சி

திருச்சியில் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவர்கள்.

திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சிலம்பம் யூத் பெடரேஷன் சார்பில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காப்போம் என்கிற உறுதிமொழி ஏற்கும் நிகழ்வை உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் தலைவர் மோகன் ஏற்பாடு செய்திருந்தார்.…

மாற்றுத் திறனாளி களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் டாக்டர் கலைஞர் அவர்களின் 100- ஆண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில் நெறி மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்…

திருச்சியில் 16-வது நாளாக விவசாயிகள் ஒப்பாரி வைத்து அரை நிர்வாண காத்திருப்பு போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 16 – வது நாளான இன்று ஒப்பாரி வைத்து…

திருச்சி அப்போலோ மருத்துவ மனையில் அதிநவீன ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோ கிராபி இமேஜிங் சிஸ்டம் – டாக்டர் காதர் சாஹிப் பேட்டி.

திருச்சி அப்போலோ மருத்துவமனையில் இதயத்தில் துளைகள் அல்லது வாழ்வு கோளாறுகள் போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. கடுமையான மாரடைப்பு நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் அவசரகால முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டிகள் மற்றும் FFR மூலம் எல்லைக்கோடு புண்களின் முக்கியத்துவத்தை…

திருச்சியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் போட்டி இன்று துவங்கியது.

திருச்சி தீரன்நகர் ஆக்ஸ்போர்ட் பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான *Taekwondo* championship உள்விளையாட்டு போட்டி இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் 7 வயது முதல் 40 வயது வரை உள்ள வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். குறிப்பாக 7…

வெல்கேர் மருத்துவ மனை சார்பில் திருச்சியில் முதன் முறையாக AUTOLOGOUS CHONDROCYTE IMPLANTATION (ACI) அதிநவீன அறுவை சிகிச்சை – டாக்டர் குமரேசபதி பேட்டி.

திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள வெல்கேர் மருத்துவமனை & ஆராய்ச்சி மையம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக AUTOLOGOUS CHONDROCYTE IMPLANTATION (ACI) அதிநவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அமெரிக்கா வாழ் இந்தியரான SUNDAR…

ஏர்போர்ட்டில் பவுடர் வடிவில் கடத்திய ரூ.10 லட்சம் மதிப்புள்ள 176 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பயணி ஒருவர் தங்கத்தை பவுடர் வடிவில்…

திருச்சி மாவட்ட காவல்துறை எஸ்பியாக வருண் குமார் பதவியேற்பு.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுஜித் குமார் மதுரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பியாக இடம் மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல்துறை புதிய கண்காணிப்பாளராக டாக்டர் வருண் குமார் இன்று காலை பொறுப்பேற்று கொண்டார்.…

15-வது நாளாக விவசாயிகள் காதில் பூ வைத்து அரை நிர்வாண காத்திருப்பு போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி பகுதியில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 15வது நாளாக தலையில் பச்சை வண்ண முக்காடு அணிந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தில்…

மோடி அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

மணிப்பூர் மற்றும் அரியானாவில் நடைபெற்று வரும் மத கலவரத்தை தூண்டிவிடும் பாஜகவையும் மோடியையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மரக்கடை அருகே இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா. லெனின் மலைக்கோட்டை பகுதி செயலாளர் தலைமை…

வரும் டிசம்பர் மாதம் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் திருச்சி கோட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு செயல் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மேலும் கோட்டச் செயலாளர் மருதமுத்து முன்னிலை வகித்தார்.…

தலித் கிறிஸ்த வர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க கோரி அனைத்து திருச் சபைகளின் கூட்டமைப்பு சார்பில் கருப்பு நாள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு மற்றும் தலித் கிறிஸ்தவர் பேரவை சார்பில் கருப்பு நாள் ஆர்ப்பாட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலித் கிறிஸ்தவ பேரவையின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஜான்சன்துரை தலைமை…

மணிப்பூர் மனிதப் படுகொலை கண்டித்து விவசாயிகள்- தொழிலா ளர்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் பெருவாரியான இனமான மைத்தேயி சமூகத்தினருக்கும், பழங்குடியினர் இனமான குகி சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இளக் கலவரமாக உருவெடுத்து மணிப்பூர் மாநிலமே பற்றி எரிகிறது. பெண்கள் ஆடையின்றி முழு நிர்வணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, கூட்டு பாலியல் பலாத்காரம்…

முதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்து வெளிநாடு தப்பிச் சென்று வந்தவரை லால்குடி மகளிர் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி லால்குடி பெருவளநல்லூரை சேர்ந்தவர் பாலகுமார்(வயது 33). சமையல் கலை நிபுணரான இவருக்கும் இளவரசி என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் சமையல் வேலைக்காக கோவையில் உள்ள ஒரு ேஹாட்டலுக்கு…

எலியை வாயால் கடித்து 14-வது நாளாக விவசாயிகள் நூதன முறையில் போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 14 – வது நாளாக வாயில் எலியை…