Category: திருச்சி

திரைப்பட விநியோ கஸ்தர்கள் சங்கத்தின் புதிய துணைத் தலைவராக 14-வது வார்டு கவுன்சிலர் அரவிந்தன் தேர்வு.

திருச்சி எஸ் ஆர் சிகல்லூரி அருகே உள்ள திருச்சி தஞ்சை புதுக்கோட்டை காயிதே மில்லத் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 2023-2024-ம் ஆண்டுக்கான தலைவர், உதவித் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழுவிற்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு இன்று காலை நடைபெற்றது,…

லாரியில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள உதிரி பாகங்கள் திருடிய 3 பேர் கைது. முக்கிய குற்றவாளி தலைமறைவு.

திருச்சி பகுதியை சேர்ந்தவர் செல்லையா மகன் சிவராஜா.இவர் சென்னையில் உள்ள ஒரு லாரி கம்பெனியில் கடந்த 5 வருடமாக டிரைவராக வேலை செய்து வருகிறார். லாரி உரிமையாளரின் நம்பிக்கைக்கு உரியவரான டிரைவர் சிவராஜா சென்னையில் இருந்து திருச்சிக்கு ரெகுலராக லோடு ஏற்றி…

ஏர்போர்ட்டில் வாசனை திரவிய பாட்டில் மூலம் கடத்திய 1.3 கிலோ தங்கம் பறிமுதல்.

உளவுத்துறை தகவலின் பேரில் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூர், சிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து விமானங்கள் மூலம் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்போது 8 பயணிகளின் உடைமைகளில் இருந்த வாசனை திரவியம் தெளிக்கும் பாட்டில்கள், பெண்களின்…

குஜராத் உயர்நீதி மன்ற தீர்ப்பை கண்டித்து திருச்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மோடி பெயர் குறித்து பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரி ராகுல் காந்தி செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ள குஜராத் உயர் நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி…

ஆளுநருக்கு வேறு வேலை இல்லாத காரணத்தால் அவ்வப்போது டெல்லி சென்று வருகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்..

தஞ்சை மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு வந்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருக்கு என் இரு சால்வை அணிவித்து வரவேற்றார் அதனைத் தொடர்ந்து திருச்சி…

திருச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எலிவேட் மேம்பாலம் – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.

திருச்சிராப்பள்ளி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நாச்சியார் பாளையம் நியாய விலை கடையில் 1846 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வருகிறது. இக்கடையினை இரண்டாகப் பிரித்து, லிங்க நகர் பகுதியில் புதிய முழு நேர அங்காடி நியாயவிலைக்…

ஏர்போர்ட்டில் எடப்பாடி சென்ற விஐபி அரை முன்பு கிடந்த மர்ம பேக் – மோப்ப நாய் மூலம் CISF வீரர்கள் அதிரடி சோதனை.

திருச்சி பெல் (BHEL) நிறுவன வளாகத்தின் முன் சுமார் 4000 சதுர அடியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் முழு உருவ வெண்கல சிலையை முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை திறந்து வைத்து…

எழில் நகரில் நுண்ணுயிர் உரமாக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டிஆர்ஒ-விடம் மனு அளித்த பாஜகவினர்.

பாரதிய ஜனதா கட்சியின் திருவெறும்பூர் வடக்கு மண்டல தலைவர் செந்தில் குமார் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அபிராமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- திருச்சி திருவெறும்பூர் தொகுதி கிருஷ்ண சமுத்திரம்…

நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி லால்குடி DSP-யிடம் புகார் அளித்த சித்தப்பா.

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து இவர் உடன் பிறந்தவர்கள் 9 பேர் இதில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா லால்குடியில் மாணிக்கம் தனது மனைவி பிரேமா உடன் வசித்து வருகிறார். கோயம்புத்தூரில் சித்தப்பா குஞ்சிதபாதம் தனது…

ஏர்போர்ட் வந்த எடப்பாடி – பர்சை திருடிய முதியவர்.

திருச்சி பெல் (BHEL) நிறுவன வளாகத்தில் சுமார் 4000 சதுர அடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் முழு உருவ வெண்கல சிலையை திறப்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் சர்வதேச திருச்சி…

மானிய விலையில் பவர் டில்லர்கள் மற்றும் விசை களையெடுக்கும் கருவிகள் – கலெக்டர் பிரதீப் குமார் தகவல்.

திருச்சி மாவட்டத்தில் மானிய விலையில் பவர்டில்லர்கள், விசை களையெடுக்கும் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர்கள் (ம) விசை…

அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் திருக்கோவில் பூச்செரிதல் விழாவை முன்னிட்டு நடந்த மாபெரும் அன்னதானம்.

திருச்சி காஜா பேட்டை பசுமடம் எதிரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் திருக்கோவில் பூச்செரிதல் மற்றும் 50 ஆண்டு திருக்கரக உற்சவ விழா இன்று நடைபெற்றது. கடந்த மாதம் 17ஆம் தேதி பூச்செரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி இரண்டாம் தேதி மாரியம்மனின்…

திருச்சி அம்மா உணவகத்தில் மாநகராட்சி மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் எண் 5 புத்தூர் ,உறையூர் சாலை ரோடு மற்றும் அண்ணா நகர் உழவர் சந்தை ஆகிய மூன்று அம்மா உணவகத்தில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு ‘வழங்கப்படும் காலை இட்லி, மதியம் சாம்பார்…

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த கோரி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் உண்ணா விரத போராட்டம்.

ஜாக் தலைவர் மீது எடுத்துள்ள ஒழுங்கு நடவடிக்கையை பார் கவுன்சில் திரும்ப பெற வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் சேமநல நிதியை 25 லட்சமாக உயர்த்தி வழங்க…

வருகிற ஜூலை 9-ம் தேதி பீமநகர் அருள்மிகு செடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.

திருச்சி பீமா நகர் அருள்மிகு செடல் மாரியம்மன் திருக்கோவில் ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனராவர் தன ஜீர்ணோத்தாரன ஸ்வர்ண பந்தன மஹா கும்பாபிஷேகம் வருகிற ஜூலை 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:45 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக கோயில்…