திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்தியோக வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டின் உள்ளே பெரியவர்களுக்கு என தனியாக 30 பெட்களும் அவசர சிகிச்சைக்காக 5 ICU பெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு என தனியாக 30 பெட்களும், 5 ICU பெட்கள் தயார் நிலையில் உள்ளது. தற்போது இங்கு 4 பேர் மர்ம காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3- பேர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர். ஒருவர் மட்டும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் அதிநவீன சிகிச்சை உபகரணங்கள் எல்லாம் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார். மேலும் பொதுமக்களிடம் வேண்டுகோளாக வருகிற நாட்களில் டெங்கு நோய் வராமல் தடுப்பதற்காக பொதுமக்கள் தங்கள் வீட்டில் நல்ல தண்ணீர் தேங்காமலும், அதில் கொசுக்கள் உற்பத்தி ஆகாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும், குறிப்பாக பகலில் கடிக்கும் கொசுக்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு வீட்டிலுள்ள உடைந்த பாட்டில், கொட்டாங்குச்சி ஆகியவற்றை அப்புறப்படுத்தி தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.
முக்கியமாக வீடுகளை சுற்றி நல்ல தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் இதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்ளலாம். தற்போது டெங்கு காய்ச்சலுக்கான முன்னேற்பாடாக வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் திருச்சி மாநகர் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது வருங்காலங்களில் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என தெரிவித்தார்.