திருச்சி மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்.

திருச்சி மாநகராட்சிக்காண 2023 2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது . திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிதி குழு தலைவர் முத்துச்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் 2022…

திருச்சி சாலையில் வீலிங் செய்த வாலிபர் – ஆலேக்காக தட்டி தூக்கிய போலீஸ்.

சினிமாவில் வரும் ஹிரோவை போன்று வேகமாக வீலிங் செய்தபடி திருச்சி காவேரி பாலம் மற்றும் தெப்பக்குளம் சாலை உள்ளிட்ட இடங்களில் வலம் வந்ததோடு மட்டுமல்லாது அதனை விதவிதமான பேக்ரவுண்ட் மியூசிக்கை போட்டு இன்ஸ்டாவில் வெளியிட்டதால் கடந்த மூன்று நாட்களாக திருச்சி மாநகரில்…

தொழில் அதிபர் ராமஜெயம் அவர்களின் 11-ம் ஆண்டு நினைவு நாள் – அமைச்சர்கள் அஞ்சலி.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சரும் கழக முதன்மைச் செயலாளரும்மான கே என் நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான கே என் ராமஜெயம் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அமைச்சர் கே.என். நேருவின் இல்லத்தில் பள்ளி…

ஊரக வளர்ச்சித் துறை ஓய்வு பெற்ற மேல்நிலை அலுவலர் நல சங்கத்தின் ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது.

திருச்சி மாவட்டம் ஊரக வளர்ச்சித்துறை ஓய்வு பெற்ற மேல்நிலை அலுவலர்கள் நல சங்கத்தின் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சி அருண் ஓட்டல் சுமங்கலி மகாலில் இன்று நடைபெற்றது இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க செயலாளர் ஜோசப் சௌந்தர்ராஜன் வரவேற்புரை…

அதிமுக பொ.செ எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வருகிற 2024 எம்.பி தேர்தலில் அதிமுக 40/40 வெற்றி பெறும் – கவுன்சிலர் அரவிந்த் பேட்டி.

அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுதும் அதிமுகவினர் இதனை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் படி ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஏற்பாட்டில்…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த் திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரெங்நாதர் கோவிலில் ஆதிப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆதிப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பங்குனிதேர்த்திருவிழா(கோரதம்) இன்று(28-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 7-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.…

திடக்கழிவு மேலாண்மை திட்ட வள மீட்பு பூங்கா அமையவுள்ள இடத்தை மாற்ற கோரி கலெக்டரிடம் மனு.

திருச்சி திருவரம்பூர் தாலுகா கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி எழில் நகர் குடியிருப்போர் சங்கம், திருச்சி வளர்ச்சி குழுமம் சார்பில் திருச்சிராப்பள்ளி எழில் நகர் குடியிருப்புக்கு அருகில் மயானம் மற்றும் குளம் உள்ள பகுதி அருகே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வள மீட்பு…

திருச்சி லால்குடி இடையாற்று மங்கலத்தில் தெற்கு அய்யன் பாசன வாய்க்கால் ஜம்பேரி சங்க தேர்தல் நடைப் பெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள எசனக்கோரை, வளவனூர்,திருமண மேடு, பச்சாம்பேட்டை, மயில்அரங்கம், பெரியவர்சீலி, பொக்கட்டக்குடி, மேலவாளை, இடையேற்றுமங்கலம், கூகூர், சாத்தமங்கலம், மும்முடிசோழமங்கலம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு பாத்தியப்பட்டது தெற்கு அய்யன்வாய்க்கால். இப்பகுதி விவசாயிகளுக்கு பிரதான பாசன வாய்க்காளாக திகழ்கிறது. தெற்கு…

திருச்சி கலெக்டரிடம் மாற்றுத் திறனாளிகள் அளித்த கோரிக்கை மனுக்கள்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், தலைமையில் இன்று மாவட்ட நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல். சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை,…

பாஜக நிர்வாகி மீது வெடிகுண்டு வீசி கொலை செய்த 7-பேர் திருச்சி கோர்ட்டில் சரண்.

புதுச்சேரி மங்களம் தொகுதி பாஜக மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் செந்தில் குமரன். இவர் வில்லியனூர் கனுவாப்பேட்டை பகுதியில் வசித்து வந்துள்ளார். செந்தில்குமரன் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.பாஜக பிரமுகரான செந்தில் குமரன் வில்லியனூர் பகுதியில் தனது…

மின் கம்பியில் உரசிய வைக்கோல் லாரி – தீப்பற்றி எரிந்து நாசம்.

திருச்சி லால்குடி அருகே செங்கரையூரில் இருந்து வைக்கோலை ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் காட்டூர் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தபோது மேலே சென்ற மின் கம்பியில் உரசியதால் வைக்கோல் தீப்பற்றி எரிந்தது. இதை கவனிக்காத லாரி…

மோடி அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் – திருமாவளவன் எம்.பி அறிவிப்பு.

திருச்சி மாநகர ஆர்.சி, சி.எஸ்.ஐ, டி.இ.எல்.சி திருச்சபைகளின் பொதுநிலையினர் பேரவைகள் இணைந்து நடத்திய சமூக அரசியல் ஆய்வரங்கம் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன்…

ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப் பட்டதை கண்டித்து இளைஞர் காங்கிரஸார் திருச்சியில் திடீர் ரயில் மறியல் போராட்டம்.

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்ததற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை சூரத் நீதிமன்றம் விதித்தது அதன் தொடர்ச்சியாக தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் இதற்கு…

ஆன்லைன் ரம்மி விளையாடி கடன் தொல்லையால் திருச்சியில் வாலிபர் தற்கொலை.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் (வயது 38) இவர் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்து கடன் தொல்லையால் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை நவல்பட்டு…

வீடுகள் ஒதுக்குவதில் முறைகேடு – தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகை யிட்ட பொதுமக்கள்.

திருச்சி தாராநல்லூர் அருகே உள்ள கல்மந்தை பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது அதில் 192 வீடுகள் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 64 மாடி வீடுகள் மற்றும் 75 வீடுகளும் தற்போது…