திருச்சியில் கல்லூரி மாணவி கர்ப்பம் – காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டரிடம் புகார் மனு.

திருச்சி மாவட்டம், பனையபுரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா- லட்சுமி , இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கருப்பையா இறந்துவிட்டார். குழந்தைகளை வளர்பதற்காக தாய் லட்சுமி திருச்சி மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களின்…

ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் புதிய கிளை “சில்வேஷ் ஏர்கான்ஸ்” ஷோரூம் திறப்பு விழா திருச்சியில் இன்று நடைபெற்றது.

திருச்சி உறையூர் தெற்கு ராமலிங்க நகர் மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் புதிய கிளையான சில்வேஷ் ஏர்கன்ஸ் எக்ஸ்க்ளூசிவ் ப்ளூ ஸ்டார் ஷோரூம் திருச்சியில் இன்று திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஏ எல்…

திருச்சி காங்கிரஸ் கமிட்டியின் தில்லைநகர் கோட்டத் தலைவராக பதவி ஏற்ற கிருஷ்ணனுக்கு எம்.பி திருநாவுக்கரசு வாழ்த்து.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி அருணாச்சலா மன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கோட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு புதிய கோட்ட தலைவர்களுக்கு…

தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சியில் நடைபெற்றது.

தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் மருத மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக திருச்சி சத்திர பேருந்து நிலையத்தில் உள்ள ரவி மினி ஹாலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாநில இளைஞரணி தலைவர் காட்டூர் தமிழரசன் தலைமையில்,…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழாவின் 6 ம் நாளில் அம்மன் மர யானை வாகனத்தில் திருவீதி உலா.

திருச்சி மாவட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் 11 நாட்கள் நடைபெறும் இந்தாண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 16 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவில் ஒவ்வொரு நாளும்…

திருச்சி கல்லுகுழி ஆஞ்சநேயர் கோயில் மஹா கும்பாபிஷேக விழா – பக்தர்கள் தரிசனம்.

திருச்சி மாநகர் கல்லுகுழி பகுதியில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது இந்த கோவிலில் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் இக்கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று…

ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையம் வந்து.. விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கி அங்கிருந்து…

திருச்சி வந்த மோடிக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விவசாய சங்க தலைவர் அய்யாக் கண்ணு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது

விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துவேன் என வாக்குறுதி கூறி பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவர் சொன்னபடி விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்தவில்லை. இந்தியாவில் 95 கோடி விவசாயிகள் பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் வாழ்கிறார்கள். விவசாயிகளின்…

திருச்சி அதிமுக மாணவர் அணி சார்பில் ஜன-25ம் தேதி நடைபெற உள்ள மொழிப்போர் தியாகிகள் அஞ்சலி குறித்து மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம்.

இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் கடந்த 1965 ஆம் ஆண்டில் நடந்த போராட்டத்தின் போது ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். தமிழ் மொழிக்காக தீக்குளித்து இறந்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள் திருச்சி, தென்னூர், அண்ணா நகர் பகுதியில்…

ஜன-21ம் தேதி தமிழகம் முழவதும் 1,000 இடங்களில் கள் இறக்கி சந்தைப் படுத்தப்படும் – விவசாயி நல்லுசாமி பேட்டி.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் அதன் செயலாளர் நல்லுசாமி தலைமையில்  நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவது இருந்து விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை…

அருள்மிகு ஜெய ஜெய ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் திருக்கோவில் சந்தை நண்பர்கள் குழு சார்பில் நடந்த அன்னதானம்.

திருச்சி மாவட்டம் தாராநல்லூர் வீரமா நகரம் பொது தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஜெய ஜெய ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் திருக்கோவில் வருகிற ஜனவரி 22ஆம் தேதி புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. மகா கும்பாபிஷேக விழாவை…

திருச்சியில் 1500 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய அமைச்சர்கள்.

தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன அதேபோல் வளர்ச்சி திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் எஸ் ஐ டி கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது இதில்…

திருச்சியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி – பரிதாபமாக உயிரிழந்த காளை.

திருச்சி நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு விழா இன்று காலை தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 830 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.…

கலை, இலக்கிய, அரசியல் பேராசான் ஜீவாவின் நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.

கலை, இலக்கிய, அரசியல் பேராசான் தோழர் ஜீவனினுடைய 61 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட துணைச் செயலாளர் செல்வகுமார் தலைமையில் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் சிவா…

திருச்சி குண்டூர் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருச்சி குண்டூரில் ஜேகேசி அறக்கட்டளை, உலகத் தமிழ் திருக்குறள் பேரவை, தமிழ்நாடு தேவர் பேரவை மற்றும் முத்தரையர் முன்னேற்ற பேரவை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. குண்டூர் கிராம தலைவர் வழக்கறிஞர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஜே கே சி…