சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்று திரும்பிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக’ திடீரென அறிவித்தார். இதற்கிடையே தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது.
இந்த சூழ்நிலையில் சசிகலா தொண்டர்களிடம் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது திருச்சியை சேர்ந்த ஒத்தக்கடை செந்தில் என்பவருடன் சசிகலா செல்போனில் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுஅதில் எம்ஜிஆர் ஜெயலலிதா காலங்களில் அதிமுக எப்படி இருந்ததோ அதைப் போலவே மீண்டும் அ தி மு க வை மீட்டுக் கொண்டு வரலாம் என பேசினார்