ஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி உலகலாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஒரு சமூகத்தின், ஒரு தேசத்தின் மரபுரிமைகளைப் பேணி பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது.அதன் பரிமாணத்தை அளவிட முடியாது. கால காலங்களாக வரலாற்று மாற்றங்களின் சாட்சியங்களாக விளங்கும் அருங்காட்சியகங்கள் நாளைய சந்ததியின் விலை மதிக்க முடியாத சொத்துக்கள் நவீன உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகமாகும். உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளிலும் பொதுவாக தேசிய அருங்காட்சியகங்கள் காணப்படுகின்றன.

அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும் அதே போல இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சர்வதேச அருங்காட்சியக தினம் 1977ஆம் ஆண்டு முதல் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது.
சமூகத்திற்கும், அதன் விருத்திக்கும் சேவையாற்றும் ஒரு நிறுவனம் என்ற அடிப்படையில் அருங்காட்சியகங்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி பொது மக்களைச்சந்தித்து அவர்களின் கவனத்தைச் செலுத்தமாறு இத்துறை சார்ந்தோர் வலியுறுத்தி வருகின்றனர்.
அருங்காட்சியகங்கள் தொடர்பான கொண்டாட்ட நிகழ்வுகள் இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய போட்டி நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், கலை நிகழ்வுகள் போன்றன மே மாதம் 18ம் நடத்த வேண்டும் என சிபார்சு செய்யப்பட்டள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் உரிய சம்பிரதாயங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்களது நிகழ்ச்சிகளை நடத்த முடியும். கலாசாரப்பரிமாற்றம் அவை பற்றிய அன்னியோன்ய புரிந்துணர்வு, ஒத்துழைப்பு, மக்களிடையே சமாதானம் போன்றவற்றை அருங்காட்சியகங்களால் ஏற்படுத்த முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்