தமிழக பஞ்சாயத்துக்களில் உள்ள 25-ஆயிரம் ஏரிகள், குளங்கள், ஊரணிகளில் உள்ள வேலிக் கருவை முள் செடிகளை அகற்ற கோரி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் இன்று காலை விவசாயிகள் கையில் கருவேல முள் செடிகளை ஏந்தி திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சென்ற திமுக கழக முதன்மை செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் வந்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் விவசாயிகளின் இந்த கோரிக்கையை தமிழக முதல்வரிடம் தெரிவித்து. இந்த கருவேல முள் செடிகளை அகற்றுவதற்கான தீர்வை உடனடியாக நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்து சென்றார்.

மேலும் இது குறித்து விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் :-

தமிழகம் முழுவதும் பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 25 ஆயிரம் ஏரிகள், குளங்கள், ஊரணிகளில் கருவேல முள் செடிகளும், காட்டாமனுக்கு செடிகளும், வெங்காயத் தாமரைகளும் அதிகமாக காணப்படுகிறது. எனவே வரும் கோடை காலங்களில் இவைகளை மழைக்கு முன்பாக வேரோடு அளிக்கக் கோரியும், மேலும் கரைகளை பலப்படுத்த கோரியும், மேலும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக மாநிலத்திற்கு ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அமைச்சரை கண்டித்து இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.