சென்னை சூளைமேடு கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் பெயிண்டர் செல்வம் வயது (40).இவரது மனைவி விஜயலட்சுமி வயது (38). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திடீரென செல்வத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்தார் இதுகுறித்து செல்வத்தின் மனைவி ஜெயலட்சுமி அதிக அளவில் மது குடித்தால் தனது கணவர் இறந்ததாக உறவினர்களிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

 

செல்வம் மரணத்தில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கையில் செல்வம் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து விஜயலட்சுமி டம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.‌ போலீஸ் விசாரணையில் விஜயலட்சுமி கூறியதாவது. தனது கணவர் செல்வம் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அடிக்கடி குடும்ப சண்டை நடந்து வந்ததாகவும். இந்நிலையில் இவர் வீட்டின் அருகே வசித்து வருபவர் மோகன் வயது (54) என்பவர் தனக்கு பழக்கமான தாகவும். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பழக்கம் கள்ள உறவாக மாறியிருக்கிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது தனது கணவர் செல்வத்துக்கு தெரியவர இருவரையும் மிகக் கடுமையாக கண்டித்து இருக்கிறார். மோகனுடன் உல்லாசம் அனுபவிக்க முடியாதபடி குறுக்கே இருந்ததால். மோகனும் விஜயலட்சுமியும் செல்வத்தை கொலை செய்துவிட முடிவு செய்து. மோகன் பூச்சி மருந்து வாங்கிக் கொடுத்து இதை செல்வம் குடிக்கும் கஞ்சியில் கலந்து கொடுத்து விடு என்று சொன்னதால். அதன்படியே செல்வம் குடித்த கஞ்சியில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்ததாகவும், கஞ்சி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறார் செல்வம்.

 

உடனே அவர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார், அதனை பயன்படுத்தி அளவுக்கு அதிகமாக சரக்கு சாப்பிட்டு உயிரே போயிடுச்சே என்று அழுது புரண்டு நாடகமாடியதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார் விஜயலட்சுமி. மேலும் கள்ளக்காதலன் மோகன் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியை சேர்ந்த கொடூர குற்றவாளி என்பதும் அவர் மீது 7 கொலை வழக்குகள் 4 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்றும் தெரியவந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *