கேரளா மாநிலம், அங்கமாலி பகுதியை சேர்ந்தவர் சஜீஸ் இவரது மனைவி பிஜூ தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் பிஜூவின் தாயார் சிக்ஸி 2 குழந்தைகளையும் கவனித்து வந்தார். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜான் பினோய்யுடன் சிக்ஸிக்கு பழக்கம் நெருக்கமாக மாற, ஒரு கட்டத்தில் சிக்ஸி தனது இரு பேரக்குழந்தையுடன் கொச்சியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் ஜானை கணவர் என்று தெரிவித்து ரூம் எடுத்து தங்கியுள்ளனர். குழந்தைகளை அழைத்து வந்ததால் கடும் அதிருப்தி அடைந்த ஜான், ஏன் பேரக்குழந்தைகளை அழைத்து வந்தாய் என்று சிக்ஸியுடன் சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சிக்ஸி அதற்குமேல் அறையில் இருந்தால் சண்டை பெரிது ஆகிவிடும் என்று எண்ணி சிறிது நேரம் வெளியே செல்ல, அந்த நேரத்தில் பாட்டி வெளியேறுவதை பார்த்து ஒன்றரை வயது குழந்தை பயங்கரமாக அழுதது.‌ ஏற்கனவே கடும் கோவத்தில் இருந்த ஜான் ஒன்றரை வயது பெண் குழந்தையை கழிவறையில் உள்ள பக்கெட்டில் உள்ள தண்ணீரில் அமுக்கி கொன்றுள்ளான். சமாதானம் அடைந்து சிக்ஸி அறைக்கு உள்ளே வந்து பார்த்தபோது குழந்தை சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதை வெளியே சொன்னால் இருவருமே மாற்றிக் கொள்வோம் என்றும், தனது ஆசை காதலனை காப்பாற்றும் நோக்கத்திலும் லாட்ஜ் ஊழியர்களிடம் குழந்தைக்கு தீடிரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுவிட்டதாக கூறி ஊழியர்களின் உதவியுடன் குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிசெல்ல, பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தை இறந்ததில் சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும், குழந்தைக்கு நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வில் குழந்தை நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் இருவரிடம் நடத்திய விசாரணையில், ஜான் பினோய் குழந்தையை கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த சிக்ஸியையும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *