மதுரை திருப்பரங்குன்றம், ஸ்ரீ நாராயணகுரு சாந்தலிங்க சுவாமி ஆசிரமத்தில் வீரேஷ்வராணந்தா சுவாமிகள் தலைமையில் ஸ்ரீநாராயணகுரு சுவாமிகளின் ஜெயந்தி விழாவிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மகானின் 168 வது, ஜெயந்தி விழா வருகிற செப்டம்பர் 10ந்தேதி வெகு விமர்ச்சையாக திருப்பரங் குன்றத்தில் கொண்டாடுவதற்க்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதில் இல்லத்து பிள்ளைமார் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பல மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். விழாவுக்கான கமிட்டி குழு சுவாமி வீரேஷ்வராணந்தா தலைமையில் முடிவு செய்யபட்டது. நிகழ்ச்சியின் அன்றைய தினம் மதுரை மக்களின் நன்மைக்காக பூஜைகளும், அன்னதானமும், குருவின் ரதம் ஊர்வலமாக புறப்பாடு நிகழ்ச்சி நடத்துவது உள்ளிட்ட ஆலோசனை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், பாராளுமன்ற சட்டமன்றம் உறுப்பினர்கள் ஆட்சியாளர்கள் உயர் அதிகாரிகள், ஆண்மீக பெரியோர்கள் பொதுமக்கள் மடாதிபதிகள் பக்தர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்