தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு அப்பர் கோவிலில் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று இரவு தொடங்கியது. அதன்படி, நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய தேர் திருவிழா. தஞ்சை பூதலூர் சாலையை அடுத்து களிமேடு பகுதியில் தேர் வரும் போது மின்கம்பத்தில் தேர் உரசியதில் மின்சாரம் தாக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

15-க்கும் மேற்பட்டோர் தீ காயமடைந்தனர். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கும், தீயணையப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயை அணைத்து படுகாயமடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும், உயிரிழந்தவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சை களிமேடு தேர்த்திருவிழா விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் நடந்த தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து வேதனையடைந்தேன்; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன். தஞ்சை தேர்பவனியில் காயமடைந்துள்ள 15 பேருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன் .விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன். இறந்தவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இறந்தவர்களின் விவரம் :-

 

1.மோகன் (22)

2.பிரதாப் (36)

3.ராகவன் (24)

4.அன்பழகன் (60)

5.நாகராஜ் (60)

6.சந்தோஷ் (15)

7.செல்வம் (56)

8.ராஜ்குமார் (14)

9.சாமிநாதன் (56)

10.கோவிந்தராஜ்

11.பரணி (13)

 

தீ விபத்து நடந்த தஞ்சை களிமேட்டிற்கு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறா. ர் காலை 11.30 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து தஞ்சை செல்லவுள்ளார். தேர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்