ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வெற்றி, 5 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி தொடக்க போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் பஞ்சாப் கிங்சிடம் 54 ரன் வித்தியாசத்திலும், 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் 8 விக்கெட்டிலும் தோற்றது. 5-வது ஆட்டத்தில் பெங்களூர் அணியை 23 ரன்னில் வென்றது. 6-வது போட்டியில் குஜராத் டைட்டன்சிடம் 3 விக்கெட்டில் தோற்றது.

சி.எஸ்.கே. அணி 7-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை இன்று சந்தித்தது. இந்தப்போட்டி மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 155-க்கு 7 விக்கெட் எடுத்தது. அதனைத்தொடர்ந்து களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 156 ரன் அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடி எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறச் செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றுள்ளது எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருக்க முடியும் என்ற நெருக்கடியில் சி.எஸ்.கே. உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *