தமிழ்நாடு மக்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனிற்கு பெரியார் மண் மீட்ட தமிழ்மான போராளி என்ற விருதும், பாராட்டு விழா நடைபெறுகிறது. 

இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு திருச்சியில் நடைபெற்றது.

கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி,பாராளுமன்ற தொகுதி செயலாளர், தமிழாதன் இம்மாதம் 21ம் தேதி, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள திருச்சி கலைஞர் அறிவாலயத்தில்பகல் 2மணி அளவில் தமிழ்நாடு மக்கள் சமூக நீதிப் பேரவையின் மாநில அமைப்பாளர், வழக்கறிஞர் மனோகரன் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியின் நிறுவன தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனுக்கு பெரியார் மண் மிட்ட தமிழ்மான போராளி என்ற விருதும், பாராட்டு விழாவும் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக மருத்துவர் ஜோதிமணி, தமிழ்நாடு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பச்சைமுத்து ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் என தெரிவித்தார்.பேட்டியின் போது மாநில அமைப்பாளர்,மாவீரன் கருப்புசாமி ,மாநில துணை செயலாளர், தாளக்குடி துரைசாமி, வழக்கறிஞர் நாட்ராயன், மாவட்ட தலைவர்.பிச்சை வேல், மாவட்ட இளைஞரணி செயலாளர், பாலாஜி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.