திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் கேசவன் என்பவர் மாணவியை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பொது தேர்வு எழுதி விட்டு உறவினர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த மாணவியை வழிமறித்த கேசவன் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி கேசவனை தள்ளிவிட்டு விட்டு அங்கிருந்து நடந்து சென்றார் இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் கேசவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்து மற்றும் உடலில் 10 மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தி விட்டு ஓடிவிட்டான்.‌ ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாணவியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான கேசவனை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு கீழே பூசரிப்பட்டி ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்த வாலிபர் கேசவன் என்பது தெரியவந்தது.‌ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவியை கத்தியால் குத்தி விட்டு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட வாலிபர் குறித்து மணப்பாறை பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *