திருச்சி கே.கே.நகர் மாநகர போலீஸ் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி மாநகர ரைபில் கிளப் கடந்த 31.12.2021 – ந்தேதி தொடங்கப்பட்டது . மாவட்ட , தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது . திருச்சி மாநகர ரைபில் கிளப்பில் மொத்தம் 215 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களும் உள்ளனர் . மேற்படி ரைபிள் கிளப்பில் 50 மீட்டர் தூரத்தில் ஒரு சுடு தளமும் , 25 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளமும் , 10 மீட்டர் தூரத்தில் மூன்று சுடுதளம் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஒன்று உள்ளது .

இக்கிளப்பில் இன்று 24.07.2022 முதல் 31.07.2022 வரை தமிழ்நாடு மாநில அளவிலான 47 வது துப்பாக்கி சுடும் போட்டிகள் – 2022 ( Rifle and Pistol Events ) திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபில் கிளப்பில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். இதில் திருச்சி ரைபிள் கிளப் செயலாளர் செந்தூர்செல்வன் மற்றும் பொருளாளர் சிராஜீதின் ஆகியோர் உடனிருந்தனர் .இப்போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 1500 வீரர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *