108 திவ்ய தேசங்களில் இரண்டாவது வைணவத் தலம் என்ற பெருமைக்குரிய உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நம்பெருமாள் -கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த அடிப்படையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் ஆறாம் நாளான அதிகாலை 3:30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநெடுக வழிநடை உபயங்கள் கண்டருளி 11 மணி அளவில் உறையூர் நாச்சியார் கோவில் வந்து சேர்ந்தார்.

கோவில் மகாஜனம் உபய மண்டபத்தில் நம் பெருமாளுக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு சேர்த்தி மண்டபத்தில் நம்பெருமாள் கமலவல்லி நாச்சியார் ஒன்றாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த காட்சியை காண்பதற்காகவும் நம்பெருமாள்- நாச்சியாரின் அருள் பெறுவதற்காகவும் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவராக வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகை புரிந்ததால் அவர்களை ஒழுங்கு படுத்துவதற்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *