மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாச சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் முனைவர் பழனிதுரை, தன்னாட்சி அமைப்பின் பொதுச் செயலாளர் நந்தகுமார்சிவா உட்பட பலர் கலந்து கொண்டு பயிலரங்கத்தில் கருத்துரை வழங்கினார். இந்த பயிலரங்கத்தில் உள்ளாட்சி போட்டிகளில் வெற்றி பெற்ற மாநகராட்சி . நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய மற்றும் உள்ளாட்சி, உறுப்பினர்கள் பேரூராட்சித் தலைவர்கள் துணைத் தலைவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில்:-

உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்பதற்காக இந்த பயிற்சி அரங்கம் நடைபெறுகிறது. கிராம சபைகள் இயங்குவது போல நகர் புறத்திலும் அந்தப் பகுதி மக்கள் பங்கு பெறும் வகையில் சபாக்கள் நடைபெறும் என தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். இதனை வரவேற்கிறோம். சமீபத்தில் சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு முதல்வர் தலைமையில் நடைபெற்றது. சமூக மற்றும் மத ரீதியான மோதல்களை தடுத்து நிறுத்துவதற்காக கோவில் செயல்படுவது போல தமிழகம் முழுவதும் சிறப்பு காவல் பிரிவு இயங்க வேண்டும் என முதலமைச்சர் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது. சமூக வலை தளங்களில் மக்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்துபவர்களை தடுத்து நிறுத்தி சமூக வலைதளங்களை கண் காணிப்பதற்காக ஒரு பிரிவு ஏற்படுத்துவதை வரவேற்கிறோம். கர்நாடகாவில் பிஜேபி தொடர்பான தீர்ப்பு 3பேர் தலைமையில் வழங்கிய தீர்ப்பு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு முரணாக உள்ளது. ஹிஜாப் அணிவது கட்டாயம் அல்ல என சுய விளக்கத்தை நீதிபதிகள் தெரிவித்து இருக்கிறார்கள். ஹிஜாப் இஸ்லாமியர்களின் ஒரு முக்கிய அணி களமாக இருக்கின்றது திருக்குரானிலும் வலியுறுத்தப்பட்ட இருக்கிறது. ஹிஜாப் அணிவது எந்தவிதமான தீங்கு விளைவிப்பது கூடியது அல்ல. சீக்கியர்களுக்கு எப்படி டர்பன் உள்ளது அதேபோல இஸ்லாமிய பெண்களுக்கு கட்டாயக் கடமையாக இருக்கின்றது. முழுக்க முழுக்க பாஜக மக்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகளையும், வெறுப்பையும் பரப்பி வருகிறது. அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றனர்.

அடுத்த வருடம் கர்நாடகாவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் மக்களிடம் தங்கள் மீது உள்ள தவறுகளை மறைப்பதற்காக இத்தகைய தீர்ப்பு வெளிவந்துள்ளது என தெரிவித்தார். மேலும், நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் பாஜகவுக்கு விகிதாச்சாரப்படி எதிராக வாக்குகள் விழுந்துள்ளது. என்னவென்றால் பாஜகவுக்கு எதிரான நிற்பவர்கள் பிரிந்து நிற்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதை இத்தேர்தல் வலியுறுத்துகிறது. இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்றால் பாஜகவுக்கு எதிராக இருப்பவர்கள் தமிழகத்தில் திமுக தலைவர் எப்படி அனைத்து கட்சி ஒன்றில் இருந்தார்களோ. அதேபோல இந்தியாவை ஒன்றிணைக்க வேண்டும். அதற்கு தமிழக முதல்வர் முன்னெடுக்க வேண்டும், விகிதாச்சார அடிப்படையில் தேர்வு முறை மாற்றப்பட வேண்டும் எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்