சேலம் மாவட்டம் , மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடி உள்ளது . மேலும் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் சுமார் 60,000 கன அடி தண்ணீர் இன்று ( 13.10.2022 ) திறந்துவிடப்பட்டது .

மேலும் எந்தநேரத்திலும் திறந்துவிடப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது . எனவே காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர கிராமங்களில் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சலவைத்தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் , நீர்வரத்து விவரத்தினை அவ்வப்போது தெரிந்துகொள்ளுமாறும் , பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது . காவிரி மற்றும் கொள்ளிடம் நீர் நிலையில் ஆற்றில் குளிக்கவோ , நீந்தவோ , மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை . பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ ” செல்பி ” ( Selfie ) எடுக்க அனுமதி இல்லை என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்