உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை , பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து உலக கண்பார்வை தின விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பலூன் பறக்கவிட்டனர் . ஜோசப் கண் மருத்துவமனை ஆண்டுதோறும் உலக கண்பார்வை தினத்தன்று மக்களுக்கு கண் நலம் பற்றிய செய்திகளை வழங்குகிறார்கள் . உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி உலகம் முழுவதிலும் சுமார் 43 மில்லியன் மக்கள் கண்பார்வை இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் . இப்பரந்த பூமியில் பார்வையிழப்பு என்னும் சுமையை மிக அதிக அளவில் கொண்டுள்ள தேசம் நமது பாரத தேசம் ஆகும் . உலக பார்வை தினத்தையொட்டி கண் நலம் பற்றிய சில முக்கிய செய்திகளையும் , ஒரு நோயை குணப்படுத்துவதைக் காட்டிலும் அதனை எவ்வாறு வராமல் தடுப்பது , ஒரு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து குணப்படுத்துவது போன்ற சில முக்கிய செய்திகளையும் , இந்த விழிப்புணர்வில் அறிவுறுத்தப்பட்டது .

இந்நிகழ்ச்சியில் போலீஸ் துணை ஆணையர் ஸ்ரீதேவி விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழியைத் தொடங்கி வைத்தார்கள் . இதில் 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் . ஜோசப் கண் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பிரதிபா மற்றும் ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாக தலைவர் டாக்டர் நெல்சன் ஜேசுதாசன் ஆகியோர் முன்னிலையில் அனைவரும் தங்கள் கண்களை பரிசோதித்து கொள்வோம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர் .

அதனை தொடர்ந்து Rtn கார்த்திக் நிர்வாக இயக்குனர் ( பாரத் குரூப் ஆப் கம்பெனிஸ் ) சிறப்பு விருந்தினாராக பங்கேற்று மாணவர்களுடன் சேர்ந்து விழிப்புணர்வு தொடர்பான பலூனை பறக்கவிட செய்தார்கள் . பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் . லெட்சுமிபிரா சிறப்புரையாற்றினார் டாக்டர் பிரதிபா இயக்குனர் இந்நிகழ்சிசியின் நோக்கங்களை எடுத்துரைத்தார் . இதற்கான ஏற்பாடுகளை ஜோசப் கண்மருத்துவமனை நிர்வாக அலுவலர் . சுபாபிரபு மற்றும் அவரது குழுவினர் செய்திருந்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *