திருவானைக்காவல் சாரதி நகர் 2வது குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் சப் – கலெக்டர் பவானி. இவர் ஏற்கனவே ஸ்ரீரங்கம் தாசில்தாராகவும், வருவாய்த்துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்துள்ளார். தற்போது இவர் மன்னார்குடியில் சப் – கலெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்ட் மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்பட7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸார் இன்று காலை 7 மணிக்கு அவரது வீட்டில் திடீர் என சோதனை மேற்கொண்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 7 மணி நேரம் நடைபெற்றது.

மேலும் அவருக்குச் சொந்தமாக லால்குடி அடுத்த வாளாடியில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் மண்ணச்சநல்லூரில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இவர் லஞ்சம் வாங்கி அதன் மூலம் ஏராளமான சொத்துகளை குவித்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *