சென்னை உயர்நீதிமன்றத்தில் விதிமுறைகளை மீறி பேனர்களை வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனு தாரராக சேர்க்கப்பட்டிருந்த திமுக தரப்பில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் பேனர்கள் வைக்க கூடாது என்று கழகத்தினருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், அதே போல் பேனர் வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன்” என்றும் கூறியுள்ளதாக தெரிவித்தனர்.

அனைத்து கருத்துக்களை பதிவு செய்த நீதிபதிகள், விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அனுமதிக்கக்கூடாது என்றும், பேனர் வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று முதல்வர் கூறினால் மட்டும் போதாது, கடுமையான நடவடிக்கை தேவை என்றும், சட்டவிரோத பேனர் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது ஆளுங்கட்சிக்கு மட்டுமான அறிவுறுத்தல் கிடையாது. அனைத்து கட்சிகளுக்குமான அறிவுறுத்தல் என்றும் தெரிவித்திருந்த நிலையில்…

திமுக தெற்கு மாவட்டம் அலுவலகம் எதிரே வைக்கப்பட்டுள்ள பேனர்.

தாராநல்லூர் கீரக்கொல்லை பகுதியில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பேனர்கள்.

திருச்சி மலைக்கோட்டை பகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளையொட்டி திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பிரம்மாண்டமான அளவில் வாழ்த்து பேனர்கள் வைத்துள்ளனர்.

வாழைக்காய் மண்டி அருகே உள்ள கோயில் முன்பு வைக்கப்பட்ட பேனர்.

இபி ரோட்டில் வைக்கப்பட்டுள்ள பேனர்.

இந்நிலையில் பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்ளமாட்டார் என நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில்.. திருச்சியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேனர் வைத்தால் மட்டுமே நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என கூறி வருகிறாரா? என எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முயற்சி எடுத்து வரும் வேளையில். அதற்கு எதிராக திருச்சி மாநகரில் பேனர் வைக்கும் கலாச்சாரத்தை உருவாக்கி வரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என பொதுமக்கள் மத்தியில் பெயர் எடுத்து வருகிறார்.

மின் ஊழியரின் பணிக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனர்.

அதிலும் குறிப்பாக இன்று கீரக்கொல்லை பகுதியில் மின் கம்பத்தை ஒட்டி வைக்கப்பட்ட திமுக பேனரால் மின் ஊழியர் ஒருவர் மின்கம்பத்தின் மீது தட்டுத்தடுமாறி ஏறி தனது பணியை மேற்கொண்டார். மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ!!! திருச்சி திமுக தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது திமுக நிர்வாகிகளால் நாளுக்கு நாள் பேனர் கலாச்சாரம் அதிகரித்து வருவது மட்டும் நிதர்சனமான உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *