திருநங்கையர் தினத்தையொட்டி திருச்சி கண்டோன்மென்ட் காவல் உதவி கமிஷனர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடந்தது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கண்டோன்மெண்ட் காவல் உதவி கமிஷனர் அஜய் தங்கம் மற்றும் வழக்கறிஞர் வேங்கை ராஜா ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

 அதனைத் தொடர்ந்து திருநங்கைகள் தினத்தில் பல்வேறு துறைகளில் உழைத்து முன்னேறி வரும் திருநங்கைகளான தமிழ்நாடு காவல் பயிற்சி பள்ளியில் பயிற்சிபெறும் திருச்சி முதல் திருநங்கை ரெஹான பானு, உமா கேட்ரின் சர்விஸ் நிர்வாகி திருநங்கை உமா, கதிர் மருத்துவமனை Computer billing திருநங்கை மெர்லின், பசுமைபற்று SHG தலைவர் திருநங்கை சத்தியா, மலைகோட்டை கோவில் பூஜை கடை திருநங்கை ரவினா, விவாசயி திருநங்கை பூமிகா,

கலைகாவேரி மாணவியும், பரத நாட்டிய கலைஞர் திருநங்கை அனிஷா, மாதவி தையல் கடை நிர்வாகி திருநங்கை மாதவி, 100 நாள் திட்ட ஒரங்கினைப்பாளர் திருநங்கை அழகு ஆகியோர் காவல் உதவி கமிஷனர் அலுவலக வளாக பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அழகு கலை நிபுனரும், முங்கில் கைவினை பொருட்கள் விற்பனை மையத்தின் நிர்வாகியும், SAFE TRUST – தலைவருமான திருநங்கை காஜல் செய்திருந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *