மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் வயது 30. இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது.. புருஷோத்தமனை பொறுத்தவரை இந்துவாக இருந்தாலும், சின்ன வயசிலிருந்தே இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து சமூக மக்களுடன் அன்பாக இணைந்து பழகி வந்துள்ளார். எல்லா மதமும் சம்மதம் என்ற ரீதியிலேயே இவருடைய கொள்கையும், வாழ்க்கையும் இருந்து வந்துள்ளது. அனைத்து தரப்பு சமுதாயத்திடமும் இவருக்கு நண்பர்களும் உண்டு. அவர்களின் மதங்கள் கிராம நிர்வாக அதிகாரியான புருஷோத்தமனை பெரிதளவு ஈர்த்தும் வந்துள்ளது அதனால், தன்னுடையதிருமணத்தை 3 மத முறைப்படி நடத்த வேண்டும் ஆசைப்பட்டார்.

அதன்படியே இருவீட்டின் சம்மதப்படி, முதல் நாள் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய முறைப்படியும், 2-ம்நாள் இந்து முறைப்படியும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்த 3 மதத்தின் திருமணத்திற்காகவே 3 விதமான திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டன.. உறவினர்கள், நண்பர்களுக்கும் 3 பத்திரிகைகளையுமே தந்தார் புருஷோத்தமன். ஒரே பெண்ணுக்கு மும்மதமுறைப்படி திருமணம் செய்தார் புருஷோத்தமன். திருமணத்திற்கு வந்திருந்த 3 விதமான மதத்தினரும் புருஷோத்தமன் புவனேஸ்வரி தம்பதியினரை வாழ்த்திவிட்டு சென்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *