திமுக.முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத துறை அமைச்சருமான கே. என். நேருவின் தம்பி தொழிலதிபர் கே. என். ராமஜெயம் 10-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கேர் கல்லூரியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்,

நிகழச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, எம்எல்ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, சௌந்தரபாண்டியன், கதிரவன், மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய சேர்மன் துரைராஜ், தொழிலதிபர் ஜான்சன் குமார், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜய், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

திருச்சி கருமண்டபம் PRB பாலசுப்பிரமணியன் மற்றும் 56-வது வார்டு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மஞ்சுளாதேவி பாலசுப்ரமணியன் ஆகியோரின் ஏற்பாட்டில் மறைந்த தொழிலதிபர் கே.என் ராமஜெயம் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து கருமண்டபம் பகுதியில் கோடைகாலத்தில் பொது மக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர், மோர் பந்தலை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்து. மோர் மற்றும் தர்பூசணி இளநீர் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *