நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு மேற்கொண்ட முயற்சியினாலும், பொதுமக்கள் தடுப்பூசி மீது கொண்ட ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் திரும்பி வருகின்றனர். இதையடுத்து மாநிலங்கள் தோறும் பள்ளிகள் திறக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் வருகின்ற கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஆந்திரப் பிரதேசத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் அனைத்து கிறிஸ்தவ மிஷினரி பள்ளிகளுக்கும் டிசம்பர் 23 முதல் 30 வரை கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்தப் பள்ளிகளுக்கு டிசம்பர் 31 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.