சென்னை கள்ளிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்டான்லி பெர்னாண்டஸ் இவர் பொதிகை தொலைக்காட்சியில் கேமராமேனாக பணிபுரிந்து பின் ஓய்வு பெற்றவர்.இவரது மனைவி தெரசா இவர்களுக்கு செட்ரிக் என்ற மகனும் ஷெரின் என்ற மகளும் உள்ளனர். இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக பாம்புகளை பிடிக்கும் நிபுணராக இருந்து வந்துள்ளார். குறிப்பாக சென்னை மாவட்டத்தில் பாம்புகளைப் பிடிப்பதில் தீயணைப்பு துறையினருக்கும் வனத்துறையினரும் பெரும் உதவியாக இருந்துள்ளார்.
மேலும் இவர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஸ்டான்லி கடந்த 5 நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஸ்டான்லி பரிதாபமாக உயிரிழந்தார். குறிப்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் ஒரு பெரிய பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஸ்டான்லி ஒப்படைத்துள்ளார். இவர் தன் வாழ்நாளில் கொடிய விஷப்பாம்புகள் சீண்டி உயிர்பிழைத்த ஸ்டாலின் தற்போது கொரோனா நோய்த்தொற்றால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.