சென்னை கோடம்பாக்கம் விளையாட்டு மைதானம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை படுஜோராக நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தி.நகர் உதவி கமிஷனர் பாரதிராஜா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் வீராசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அசோக் நகர் புதூரை சேர்ந்த கிஷோர் வயது24 கேகே நகர் ராணி அண்ணா நகர் குடியிருப்பை சேர்ந்த கிஷோர் குமார் 26 ஆகிய இருவரையும் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டு சோதனை செய்ததில். அவர்களிடம் மறைத்து வைத்திருந்த ஏராளமான போதை மாத்திரைகள் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இரு வாலிபர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொத்தவால் சாவடி சேர்ந்த பூங்குன்றன் வயது 26, கோகுல் வயது24, பூந்தமல்லியை சேர்ந்த ராஜலட்சுமி வயது22 மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த முத்துப்பாண்டி வயது 28 ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள், 2 லேப்டாப் ஒரு ஐபேடு, 8 செல்போன்கள், மற்றும் 4 லட்சத்து 41 ஆயிரத்து 300 ரூபாய் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் விசாரணை மேற்கொண்டதில் இந்த போதை மாத்திரை கடத்தல் கும்பலுக்கு மூளையாக இளம் பெண் ராஜலட்சுமி செயல்பட்டது தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்