திருச்சி மாவட்ட விவசாயிகளின் மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர். 100-க்கும் மேற்பட்டோர் திருச்சி நொச்சியம் பகுதியில் உள்ள மாங்குடி மங்கலம் மணல் ரீச் பகுதியிலும் அதேபோல் லால்குடி பகுதியில் உள்ள தாழக்குடி மணல் ரீச் பகுதியில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் காவிரி ஆற்றில் மணல் அள்ளிக் வந்தனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி கடந்த 10 நாட்களாக மணல் ரீச் மூடப்பட்டுள்ளது.

 இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று காலை திருச்சி சுப்பிரமணியன் புரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை கனிம மற்றும் கண்காணிப்பு உட்கோட்டம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த உள்ளிருப்பு போராட்டம் குறித்து மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குணசேகரன் கூறுகையில்:-

இந்த மணல் ரீச்சை நம்பி 2400 மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பமும் உள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி தற்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் ரீச்சை மூடிவிட்டனர். இதனால் 2,400 குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக லாரிக்கு வடுக குடி, புத்தூர் ஆகிய இரண்டு இடங்களில் லோடு நிரப்பப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படுகிறது. ஆனால் நாங்கள் இயந்திரங்கள் பயன்படுத்தாமல் மனிதர்களை கொண்டு மணல் அள்ளுகிறோம். ஆனால் அதிகாரிகள் சரியாக பதில் அளிப்பதில்லை. அதிகாரிகள் இப்படியே மௌனம் சாதித்தால் குடும்பத்துடன் வந்து நீர்வளத்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *