கம்பம் கூலத்தேவர் முக்கினை சேர்ந்தவர் பிரகாஷ், இவர் தனியார் நிதி நிறுவனத்தின் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கனிமொழி கடந்த செப் 21ஆம் தேதி தன் கணவனை காணவில்லை என்று கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பிரகாஷ் செல்போனை சோதனை செய்ததில் ஒரே நம்பரில் பல நூற்றுக்கணக்கான தடவை போன் உரையாடல் இருப்பதை கண்டு சந்தேகமடைந்த காவல்துறையினர் ஆய்வு செய்ததில் பிரகாஷ் செல்போனுடன் தொடர்பு இருந்த நம்பர் அதே பகுதியை சேர்ந்த வித்தியா என்பது தெரியவந்தது. போலீஸ்சார் வித்தியாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது வித்தியாவின் கணவர் வினோத்குமார் ஆட்டோ ஓட்டுபவர் இவரும் பிரகாஷ்ம் நண்பர்களாம் நண்பர் என்ற முறையில் வினோத்குமார் வீட்டிற்கு அடிக்கடி வந்த பிரகாஷ் வினோத்குமாரின் மனைவி வித்தியாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. இந்த கள்ளத்தொடர்பு வினோத்குமார் தெரியவந்ததை தொடர்ந்து மனைவியையும் தனது நண்பர் பிரகாஷையும் ஒருவருடத்திற்கு முன்பு கண்டித்துள்ளார்.

 இருவரும் பிரிந்து இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் வித்தியாவிற்கும் பிரகாசிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரகாஷ் வித்யாவின் ரகசிய படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டதை கண்ட வினோத்குமார் தன் மனைவியிடம் மீண்டும் எச்சரிக்கை செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி பிரகாஷ் வினோத்குமார் இருவரும் மது அருந்தி உள்ளனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஏற்கனவே திட்டமிட்டபடி வாங்கி வைத்திருந்த கயிற்றால் பிரகாஷின் கழுத்தில் கணவன் மனைவி இருவரும் சுருக்கு போட்டு கழுத்தை நெருக்கி கொலை செய்தனர்,

 பின்னர் இறந்த பிரகாஷின் உடலை வினோத்குமார் தனது ஆட்டோ டிரைவர் நண்பன் ரமேஷ் உதவியுடன் வினோத்குமார் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றின் சடலத்தை வீசிவிட்டு வீட்டுக்கு திரும்பியதாக போலீசார் விசாரணையில் வித்தியா , வினோத்குமார் தெரிவித்ததாக போலீஸ்சார் கூறினர். இந்த நிலையில் கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸ்சார் மேன் மிஸ்ஸிங் வழக்கினை வினோத்குமார் வித்யாவின் வாக்குமூலம் படி கொலை வழக்காக மாற்றி வினோத்குமார், வித்தியா, ரமேஷ் ஆகிய மூவர் மீதும் பதிவு செய்து மூவரையும் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *