திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 43 வது வார்டு காஜா நகர் பகுதியில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.‌ ஆய்வின்போது குடிநீர் குழாயில் தண்ணீர் செந்நிறமாக வருவதாக அப்பகுதி மக்கள் கூறினர். மேலும் மாநகராட்சி பொதுக் கழிப்பிடத்தை ஆய்வு செய்தபோது அதுபல வருடங்களாக பூட்டி மக்களுக்கு பயன்படாமல் இருந்து வருவதை கண்டித்து மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படி உத்தரவிட்டார்.

மேலும் 43 வது வார்டு காஜா நகர் குடிசைப் பகுதியில் குடிநீர் போர்வெல் அமைத்து நீர்த்தேக்க தொட்டி வைத்து மக்களுக்கு பயன்படும்படி மூன்று மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் அதை சரி செய்யாமல் போர்வெல் போட்டதோடு நிறுத்தி நீர்த்தேக்கத் தொட்டியை அமைக்காமல் மெத்தனம் காட்டியதைக் கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் நாற்காலிகளை தூக்கி கொண்டு சாலைக்கு வந்தார் . இதுகுறித்து பொன்மலை மாநகராட்சி கோட்ட அதிகாரிகளுக்கு அலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடம் மாநகராட்சி அதிகாரிகளிடம்.

கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கூறுகையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக கூறிய எனது உத்தரவை கண்டுகொள்ளாமல் விட்டதைக் கண்டித்தும், மீண்டும் இந்த பணியினை விரைவாக முடித்து தரக்கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார். எம்எல்ஏவின் உத்தரவை அடுத்து அப்பகுதியில் அமைக்கப்பட்ட பழைய போர்வெலில் மின்மோட்டார் பொருத்தி 1000 லிட்டர் நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் வேலை தற்போது நடைபெற்றுக் தண்ணீர் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் கோரிக்கைக்காக சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நிறைவேற்றிய எம்எல்ஏவின் இந்த அதிரடி நடவடிக்கையால் காஜா நகர் குடிசைப் பகுதி மக்கள் மிகுந்த சந்தோசத்தில் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்