தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனாலும் பொதுமக்கள் பலர் பொதுவெளியில் மாஸ்க் அணியாமல் சென்று வருகின்றனர். இதனால் மாஸ்க் அணியாமல் செல்பவர்களிடம் ரூ.200 இதுவரை அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் மக்கள் பலர் மாஸ்க் அணியாமல் செல்லும் நிலை உள்ளது. அதனால் இனி பொதுவெளியில் மாஸ்க் அணியாமல் செல்பவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *