இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவது குறித்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக நிதிநிலை அறிக்கையை பேரவைக் கூட்டத் தொடரில் இன்று தாக்கல் செய்து உரையாற்றிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த விளக்கத்தில், “குடும்பத்தின் தலைவர் பெண்ணாக இருந்தால்தான் உரிமைத் தொகை உதவி கிடைக்கும் என்று மக்களிடையே தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

 

இதனால், பல குடும்ப அட்டைகளில் பெண் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குடும்பத் தலைவராக பெயர் மாற்றப்பட்டு வருகிறது. இந்த உரிமைத் தொகை நிதியுதவியை இல்லத்தில் பணி செய்யும் இல்லதரசிகளுக்கு உதவும் வகையில் வழங்கப்பட உள்ளது

 

எனவே, குடும்பத் தலைவியாக இருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும் என்று பரவிய தகவல் தவறானது. எனவே, உரிமைத் தொகை பெற பெண்கள் பெயர்தான் இருக்க வேண்டும் என தவறான நினைத்து குடும்ப அட்டைகளில் குடும்பத் தலைவர்களின் பெயர்களை மாற்ற வேண்டியது அவசியம் இல்லை.

 

தகுதிவாய்ந்த குடும்பங்களை கண்டறிய வரைமுறைகள் உருவாக்கப்படும். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தகுதியான குடும்பங்களை கண்டறிந்த பிறகே அமல்படுத்தப்படும்” என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *