தர்மபுரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் வேண்டும் என்று கேட்டு எம்பி செந்தில்குமார் பதிவிட்டுள்ள ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மட்டும் 197 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 12,284 ஆக உயர்ந்துள்ளதுபலி எண்ணிக்கைக்கையோ 75 ஆக நீடிக்கிறது. இப்போதைக்கு 1,679 பேர் தொடர் சிகிச்சையில் இருந்தாலும், மேலும் தொற்று பாதிப்பு அதிகமாகி விடக்கூடாதே என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது.இந்நிலையில்தான் தருமபுரி தொகுதியின் திமுக எம்பி செந்தில்குமார் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில்,” தருமபுரியில் உள்ள மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்களுடன் தொடர்ந்து நான் பேசி கொண்டுதான் இருக்கிறேன்.. தினமும் என்ன களநிலவரம் என்பதையும் கேட்டு அறிந்து வருகிறேன்.. ஆனால், தர்மபுரியில் இறப்பு விகிதம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது… இது எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.1,000 படுக்கைகளும் நிரம்பிவிட்டன… அதில் 450 ஆக்சிஜன் படுக்கைகள் ஆகும்.. இப்போதைக்கு தருமபுரியில் 10 ஆயிரம் படுக்கை வசதிகள் தேவைப்படுகின்றன. டாக்டர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் இங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. டியூட்டியில் இருக்கும் பணியாளர்களும் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.
எனவே, இதுக்கு உடனடி தீர்வு தேவை. தருமபுரியில் நிலைமையை விரைவாக கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். அதற்கு அந்த மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விட வேண்டும்… மிகத் தீவிர முழு ஊரடங்கையும் உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது. இதற்கு பொதுமக்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று செந்தில்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
திமுக எம்பியின் இந்த ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. ஒரு எம்பியே அதுவும் ஒரு டாக்டரே, இந்த அளவுக்கு விலாவரியாக தன் மாவட்டத்தின் நிலைமையை எடுத்து வைத்திருப்பதன்மூலம், தருமபுரியின் நிலைமை எந்த அளவிற்கு ஆபத்தில் இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது… எனவே, தர்மபுரியில் ரெட் அலர்ட் போடப்படுமா? அரசு என்ன மாதிரியான நடவடிக்கையை அங்கு எடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்