திருச்சி மாவட்டம், லால்குடி கீழவீதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் 58 ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைப்பெற்றது. 

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைகளுக்கும், வீரர்களுக்கும் பட்டு புடைவைகளும், வேஷ்டி, துண்டுகள் வழங்கினர்‌.

இதற்கான பாதுகாப்பு பணியில் லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 200 க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, தம்மம்பட்டி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட காளைகளும், 300 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்களும் பங்பேற்றனர்.

விழா ஏற்பாடுகளை பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் காத்தான் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.