தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் (49).இவர் மீதுகடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலம்,ஹைதராபாத் காவல் நிலையத்தில் வரதட்சனை கொடுமை வழக்கு பதிவாகியது. இதை அடுத்து போலீசார் ஶ்ரீனிவாஸ்சை கைது செய்து, விசாரணை நடத்த தேடி வந்தனர். ஆனால் இவர் போலீசிடம் சிக்காமல் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் ஶ்ரீனிவாஸ் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல இருக்கிறார் என்ற தகவல் போலீசுக்கு கிடைத்தது. இதை அடுத்து ஹைதராபாத் மாநகர போலீஸ் ஶ்ரீனிவாசை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனா். அதோடு அனைத்து சா்வதேச விமான நிலையங்களிலும் எல் ஓ சி போட்டு வைத்திருந்தனா். இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது.

அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்து பயணிகளை, விமானத்திற்கு அனுப்பி கொண்டு இருந்தனர். அதே விமானத்தில் ஹைதராபாத் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஶ்ரீனிவாசம் சிங்கப்பூருக்கு தப்பி செல்வதற்காக வந்தார். அவருடைய பாஸ்போர்ட், ஆவணங்களை பரிசோதித்த குடியுரிமை அதிகாரிகள், இவர் இரண்டு ஆண்டுகளாக ஹைதராபாத் போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பதை தெரிந்து கொண்டனர்.

 இதை அடுத்து ஶ்ரீனிவாஸ் சிங்கப்பூா் பயணத்தை ரத்து செய்தனர். அவரை பிடித்து ஒரு தனி அறையில் அடைத்து வைத்தனர். அதோடு ஹைதராபாத் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் சீனிவாச கைது செய்து ஹைதராபாத் கொண்டு செல்வதற்காக, சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். இந்த சம்பவத்தால் சென்னையிலிருந்து சிங்கப்பூா் சென்ற இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்