108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபம் வந்தார். பின்னர் காலை 5:30 மணி முதல் காலை 6:15 மணிக்குள் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து 7:30 மணிக்கு நம்பெருமாள் கொடி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 7:45 மணிக்கு அறையை சென்றடைந்தார். மாலை 4:30 மணிமுதல் 5:30 மணிவரை பேரிதாடனம் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6:30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகள் உலா வந்து இரவு 8:30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைகிறார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

விழாவின் இரண்டாம் நாளான நாளை (29-ந்தேதி) மாலை கற்பசுவிருஷ வாகனத்திலும், 30-ந்தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலையாளி வாகனத்திலும், 1-ந்தேதி காலை இரட்டைபிரபை வாகனத்திலும், மாலை கருடவாகனத்திலும், 2-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 3-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமான் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.4-ந்தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 5-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *