ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் ஆசிரியர் பெருமக்களை அவர்களது தன்னலமற்ற பணியினை பாராட்டும் விதத்தில் திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சந்தோஷ் சிறப்பு பள்ளியில் சிறப்பு குழந்தைகளுக்கு கல்வியினை கற்றுத்தரும் தன்னலமற்ற ஆசிரியைகளுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் சந்தோஷ் சிறப்பு பள்ளியில் 30 க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகள் படித்து வருகின்றனர் இந்த குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி மற்றும் அந்த குழந்தைகளின் தனி திறமைகளை வெளி கொண்டு வரும் பணியினை இந்த பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியை சரஸ்வதி அவர்கள் தலைமையில் ஆசிரியைகள் லீமா தேவி ஆசிரியர் கோகுல் ராஜ் உதவியாளர்கள் சூர்யா யுவராணி ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர் அவர்களின் இந்த மகத்தான பணியினை போற்றும் வகையில்

மாற்றம் அமைப்பின் சார்பில் அவர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது இந்நிகழ்வில் தேசிய மாநில விருதுகள் பெற்ற குறும்பட நடிகரும் இயக்குனரும் மற்றும் மாற்றம் அமைப்பின் நிறுவனர் தலைவருமான ஆர்.ஏ.தாமஸ் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சதிஷ் ஜான் சாக்ஸிடு அமைப்பை சேர்ந்த சசி சமூக செயற்பாட்டாளர் ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் திரளான சிறப்பு குழந்தைகள் கலந்து கொண்டு பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கடந்த 2024 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது தேர்தல் ஆணைத்திற்க்காக ஆர்.ஏ.தாமஸ் அவர்களின் இயக்கத்தில் அவரது குழுவினரால் எடுக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு குறும்படத்தில் சந்தோஷ சிறப்பு பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
