இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பர பிள்ளை அவர்களின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் எதிரே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அருகில் ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன, அதிமுக நிர்வாகிகள் சுரேஷ் குமார், மற்றும் டாக்டர் செந்தில் பிள்ளை, ஆர். வி. ஹரிஹரூன் பிள்ளை மற்றும் திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
