திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மலையாண்டிபட்டியை சேர்ந்தவர் ரவி. பஸ் ஸ்டாண்டில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் வேலை செய்து வரும் இவரது மகன் சந்தோஷ் (22), மணப்பாறை அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4 ம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கிய கல்லூரி மாணவன் செலவுக்கு பணமின்றி கடந்த 4 ம் தேதி வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது தனது பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டிலிருந்த 2 கிராம் மோதிரம் மற்றும் பணத்தை எடுத்து கொண்டு வெளியேறிய கல்லூரி மாணவன், அனைத்தையும் ஆன் லைன் ரம்மியில் இழந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த இன்ஜினியரிங் மாணவன் சந்தோஷ் தனது செல் போனில் தற்கொலை செய்துகொள்ளபோவதாக ஸ்டேட்டஸ் வைத்திருந்த நிலையில், மணப்பாறை கீரை தோட்டம் என்றயிடத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவயிடத்துக்கு சென்ற ரயில்வே போலீசார், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவனின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஜியனிரிங் படிக்கும் கல்லூரி மாணவன் ஆன் லைன் ரம்மியில் மூழ்கி, விரக்தியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *