தேசத்தின் புகழ்பெற்ற மருத்துவராகவும், மேற்கு வங்கத்தின் இரண்டாம் முதலமைச்சராகவும் விளங்கிய டாக்டர். பிதன் சந்திர ராய் (பி.சி.ராய்) நினைவைப் போற்றும் விதமாக அவருடைய பிறந்த மற்றும் இறந்த தினமான ஜூலை 1ம் தேதி தேசிய மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1961 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை இந்திய அரசு வழங்கியது.இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் 1991-ஆம் ஆண்டில் இருந்து இந்நாள் மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனையொட்டி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு மருத்துவர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்நிலையில் திருச்சி மருத்துவர்களுக்கு மருத்துவர் தினம் வாழ்த்து கூறி கேக் வெட்டி மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த நர்ஸ்கள்.