இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையின் 86-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அருகில் மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன், கவுன்சிலர் அரவிந்த் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதேபோல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையின் 86-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் காளீஸ்வரன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *