காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் , இது தொடர்பாக ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , சமூக ஆர்வலரும் , பத்திரிகையாளர் சங்கத் தலைவருமான அல்லூர் சீனிவாசன் தெரிவித்தார் .

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரம் :-

திருச்சியில் சமூக ஆர்வலராகவும் மற்றும் பத்திரிகையாளர் சங்கத் தலைவராக இருந்து வருபவர் அல்லூர் சீனிவாசன் . இவர் மீது கடந்த 24ம் தேதி அல்லூர் ஊராட்சி தலைவராக இருந்து வரும் விஜயேந்திரன் என்பவர் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார் . அதில் , தனது பெரிய மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி 2019 – ம் வருடம் பிப்ரவரி மாதம் ரூ . 5 லட்சம் பேரம் பேசி , முன் பணமாக ரூ . 3 லட்சத்தை 2 பேர் முன்னிலையில் அல்லூர் சீனிவாசன் வாங்கியதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது . அதன்பிறகு வேலை வாங்கி தரவில்லை என்று பணத்தை திருப்பிக் கொடு என்று கேட்டதாகவும் , அதற்கு உன் தலையை எடுத்து விடுவேன் என்று அல்லூர் சீனிவாசன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கடந்த 22.09.2022 அன்று கூறியுள்ளார் . மேலும் , அல்லூரை சேர்ந்த சித்திர கோனார் என்பவர் மகனான இன்னொரு சீனிவாசன் மூலம் பலருக்கும் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து அவர்களிடமிருந்து ஆர்.சி. புக்கை வாங்கி வைத்துக் கொண்டு கந்து வட்டி தொழில் செய்து வருகிறார் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார் .

இதையடுத்து , ஜீயபுரம் போலீஸ் சார்பில் அல்லூர் சீனிவாசன் மீது பண மோசடி தொடர்பாகவும் , கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டது . எந்தவித விசாரணையுமின்றி எப்.ஐ.ஆர் . பதிவு செய்யப்பட்டு 26.09.2022 அன்று ஜீயபுரம் காவல் நிலையத்தில் ஆஜராக சொல்லி அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது . இதையடுத்து 26 – ம் தேதி திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவரை ( ஐ.ஜி ) அவரது சுப்பிரமணியபுரம் அலுவலகத்தில் அல்லூர் சீனிவாசன் நேரில் சந்தித்து , தன் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளதாக கூறி அதற்குரிய விளக்கத்தை அளர்த்தார் . ரூ . 3 லட்சம் பணம் வாங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்த தேதியில் தான் அல்லூரில் இல்லை என்றும் , சென்னையில் இருந்ததாகவும் விளக்கம் அளித்தார் . காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தன் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளதாகவும் , அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் போலீஸ் ஐ.ஜி.யிடம் தன் தரப்பு விளக்கத்தை அளித்தார் . இதையடுத்து ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தினால் நேர்மையான விசாரணையாக அது இருக்காது என்று அல்லூர் சீனிவாசன் வலியுறுத்தியதை தொடர்ந்து , மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீஸ் எஸ்.பி. முன்னிலையில் கூடுதல் டி.எஸ்.பி. குற்றாலிங்கம் 01.10.2022 இன்று விசாரணை நடத்தினார் . அவரிடம் அல்லூர் சீனிவாசன் தனது வாக்கு மூலத்தை பதிவு செய்தார் .

அதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் அல்லூர் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இது முழுக்க முழுக்க காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடுக்கப்பட்ட பொய் வழக்கு என்றும் , இது தொடர்பாக ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் . இதற்கு பின்னணியில் கார்ப்பரேட் முதலாளிகளும் , பத்திரிகை – ஊடக முதலாளிகளும் இருப்பதாக தெரிவித்தார் . நான் வட்டித் தொழில் செய்பவன் அல்ல . யாருக்கும் நான் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பறிக்கவும் இல்லை . இது முழுக்க முழுக்க பொய் வழக்காகும் . இதை நான் சட்ட ரீதியாக சந்திக்கத் தயார் மேலும் எந்தவித விசாரணையும் நடத்தாமல் எப்.ஐ.ஆர் . பதிவு செய்ததை பத்திரிகைகளோ ஊடகங்களோ கண்டிக்காமல் தன்னைப் பற்றி பொய்ச் செய்தி வெளியிடுவதில் மட்டும் முனைப்பு காட்டுவது ஏன் ? என்று அல்லூர் சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்